வெள்ளி, 17 ஜூலை, 2020

ஆசாத் பட்டான் நீர்மின் திட்டம் ‑ பாகிஸ்தான் – சீனா இணைந்து உருவாக்கி வருகிறதா?

Nirupama Subramanian

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள ஜீலம் ஆற்றில் 700 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஆசாத் பட்டான் நீர்மின் திட்டத்திற்கான ஒப்பந்தம், சீனா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே கடந்தவாரம் கையெழுத்தானது.

1.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்த மின் திட்டம், சீனா – பாகிஸ்தான் பொருளாதார நடைபாதை திட்டத்தின் கீழ், கடந்த 2 மாதங்களில் கையெழுத்து ஆகியுள்ள இரண்டாவது பெரிய திட்டம் ஆகும். முதல் திட்டம், முஷாபராபாத் பகுதியில், ஜீலம் ஆற்றில் 2.3 பில்லியன் மதிப்பிட்டில், 1,100 மெகாவாட் மின் உற்பத்தி திட்டமான கோஹலா திட்டம் ஆகும்


ஆசாத் பட்டான் நீர்மின் திட்டம்

இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம், ஜூலை 7ம் தேதியே இறுதி செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பொறியியல் திட்டம், கொள்முதல் மற்றும் ஒப்பந்தப்பணியாளர்கள் அடிப்படையிலான இத்திட்டம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் சுத்னோதி கிராமத்தின் ஆசாத் பட்டான் பாலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது

2002ம் ஆண்டிலேயே இத்திட்டம் உருவாக்கப்பட்ட போதிலும், 2017ம் ஆண்டிலேயே விரிவான திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டம் 69 மாதகால அளவினதாகவும், 2024ம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அணையின் 90 மீ உயரத்தில் 3.8 சதுர கிமீ பரப்பளவில. இந்த நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது

ஆசாத் பட்டான் நீர்மின் திட்டத்திற்கான அனுமதியை, 2016 ஜூன் மாதத்தில், தனியார் மின்உற்பத்தி கட்டமைப்பு வாரியமான பவர் யுனிவர்சல் கோ.லிமிடெட் வழங்கி இருந்தது. பாகிஸ்தானில் 1994ம் ஆண்டுமுதல், மின்திட்டங்களுக்கு தனியார் துறை பங்களிப்பு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. பவர் யுனிவர்சல் கோ. லிமிடெட் நிறுவனம், சீனாவின் ஜெஜூபா குழுமத்திற்கு சொந்தமானது ஆகும். இந்நிறுவனம், சீனாவின் மல்டிநேசனல் கார்ப்பரேஷன் நிறுவனம் என்றும், இதற்கு பல்வேறு நிறுவனங்களில் பங்குரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

ஜெஜூபா நிறுவனம், பாகிஸ்தானில் மாற்றத்தக்க மின் உற்பத்தி நிறுவனமான லாரய்ப் குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த இணைப்பு ஒப்பந்த்த்திற்கு, ஆசாத் பட்டான் பவர் பிரைவேட் லிமிட்டெட் கார்ப்பரேஷன் என்று பெயரிடப்பட்டது.

கட்டுமானம், சொந்தம், செயல்பாடு மற்றும் மாற்றியமைத்தல் என்பதன் கீழ் BOOT மாதிரியின் படி இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த திட்டம் பாகிஸ்தான் அரசிடம் அளிக்கப்படும். ஆசாத் பட்டான் நீர்மின் திட்டம், ஜீலம் நதிக்கரையில் அமையும் 5வது நீர்மின் திட்டம் ஆகும்.

ஜீலம் ஆற்றின் மேற்புறத்தை நோக்கியவாறு ஆசாத் பட்டான், மாஹல், கோஹலா மற்றும் ஷகோத்தி ஹாட்டியன் திட்டங்களும், கீழ்புறமாக, கரோட் திட்டமும் செயல்பட்டு வருகிறது கோஹலா, ஆசாத் பட்டான் மற்றும் கரோட் திட்டங்கள், சீனா – பாகிஸ்தான் பொருளாதார திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ளது

கோஹலா திட்டம்

ஜீலம் ஆற்றின் முஷாபராபாத் நகரத்தின், சிரான், பர்சாலா கிராமங்களுக்கு அருகில் 1,124 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட திட்டமாக இது உருவாக்கப்படுவதாக, CPEC ONLINE இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், China Three gorges corporation (CTG), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசு மற்றும் தனியார் மின் உற்பத்தி மற்றும் கட்டமைப்பு வாரியத்துக்கு இடையே, முத்தரப்பு ஒப்பந்தமாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், சீனா, இந்த திட்டத்தில்தான் அதிக முதலீடு செய்துள்ளது. இந்த திட்டம், 2026ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக, 2015ம் ஆண்டிலேயே, கோஹலா ஹைட்ரோ கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனம், CTG கார்ப்பரேசன் நிறுவன ஒத்துழைப்புடன் சிறப்பு வாகனத்தை உருவாக்கியிருந்தது. China three gorges corporation நிறுவனம், சில்க் ரோடு நிதி மற்றும் சர்வதேச நிதி கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் மிகப்பெரிய பங்குதாரர் ஆவார்

2008ம் ஆண்டில் இருந்து China Three Gorges கார்ப்பேரசன் நிறுவனத்துடன் பாகிஸ்தான் இணைந்து செயல்பட்டு வருகிறது. இது 2014ம் ஆண்டு முதல் சீனா பாகிஸ்தான் பொருளாதார நடைபாதை திட்டத்தின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. BOOT மாதிரி திட்டத்தின் கீழ் இத்நத திட்டம் அமைய உள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திட்டம் பாகிஸ்தான் அரசு வசம் ஒப்படைக்கப்படும்.
கோஹலா நீர்மின் திட்டம், அணையின் 69 மீ உயரத்திலும், 8 கிமீ நீள பாதையிலும் அமைய உள்ளது.

இந்த திட்டத்தினால், ஜீலம் ஆற்றின் நீர்ப்போக்கு பாதிக்கப்படும் என்று .கூறி, 2018ம் ஆண்டிலேயே முஷாபராபாத் பகுதி மக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்திற்கான நிதியில், சீன வளர்ச்சி வங்கி 85 சதவீதத்தை கடனாக வழங்க உள்ளது. மீதி பணத்தை ஹபீப் வங்கி வழங்க உள்ளது. 30 சதவீத நிதியை, பங்குவர்த்தகத்தின் மூலம் திரட்டப்பட உள்ளது.

மற்ற திட்டங்கள்

கரோட் நீர்மின் திட்டம், சீன பங்களிப்பில் பாகிஸ்தானில் செயல்படுத்தப்பட உள்ள 3வது நீ்ர்மின் திட்டம் ஆகும். இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி மாவட்டத்திற்கும், பஞ்சாப் மாகாணத்தின் ராவல்பிண்டி மாவட்டத்திற்கும் இடையே அமைய உள்ளது. இந்த திட்டத்திற்கான விரிவான ஆய்வறிக்கை 2021ம் ஆண்டில் இறுதி செய்யப்படும் என்று CPEC இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கில்ஜிட் பல்டிஸ்தன் – பண்டசர் நீர்மின் திட்டம் மற்ம் கில்ஜிட் கியூ திட்டங்கள் செயல்திட்டத்தில் உள்ளதாக என்று CPEC இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், மற்றும் கில்ஜிட் பல்டிஸ்தான் பகுதியில் அணைகள் மற்றும் கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பகுதிகள், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சொந்தமானனவ என்றும் தெரிவித்துள்ளது.