வெள்ளி, 1 ஏப்ரல், 2016

காங்கிரஸ் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க சதி:

சோனியாகாந்தி

sonia_gandhi_0காங்கிரஸ் ஆட்சி நடத்தும் மாநிலங்களில், ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அங்குள்ள சிவ்சாகர் மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், சோனியாகாந்தி உரையாற்றினார். 

அப்போது, மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், அருணாச்சலபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மோடி தலைமையிலான மத்திய அரசு கவிழ்த்துவிட்டதாக குற்றம்சாட்டினார். இதன் மூலம் ஜனநாயகத்திற்கு எதிராகவும், அரசியல் 

சாசனத்திற்கு எதிராகவும் மோடி அரசு செயல்படுவதாக அவர் விமர்சித்தார். பிரதமர் மோடி சிறுவயதில் அசாம் டீ விற்றதாக கூறியதை சுட்டிக்காட்டிய சோனியாகாந்தி, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அவர் என்ன செய்தார் என்றும் சோனியாகாந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.