செவ்வாய், 12 ஏப்ரல், 2016

தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு கடந்த நிதியாண்டில் ஒதுக்கிய தொகை ரூ 104 கோடி,

‪#‎தெலுங்கானா‬ மாநிலத்தை சேர்ந்த ‪#‎மஜ்லீஸ்_கட்சி‬ தலைவர் #அஸதுத்தீன்_உவைஸி அவர்களை அகில இந்திய அளவில் இஸ்லாமிய மக்கள் நேசிப்பதற்கு அவருடைய அரசியல் பயணத்தில் சமுதாயத்தை முன்னேற்றும் லட்சியமே முக்கிய காரணமாகும்.
தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு கடந்த நிதியாண்டில் ஒதுக்கிய தொகை ரூ 104 கோடி,
தெலுங்கானா மாநிலத்தில் சிறுபான்மை முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக தெலுங்கானா அரசு கடந்த நிதியாண்டில் ஒதுக்கிய தொகை ரூ 1600 கோடி, இவற்றில் ரூ 400 கோடி மாணவர்களின் கல்விக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு 3.5 சதவீதம்..!
தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு 12 சதவீதம்..!
தெலுங்கானாவில் ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர், நீதித்துறையினர், விஞ்ஞானிகள் என்று அரசு பணிகளில் அனைத்து துறையிலும் 100 க்கு 12 பேர் முஸ்லிம்கள் பணிப்புரிகிறார்கள்.
இப்படி தெலுங்கானா மாநிலத்திலுள்ள முஸ்லிம்களை அரசியல் ரீதியாக மட்டுமில்லாமல் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல், அதிகாரம் என அனைத்து துறையிலும் முஸ்லிம் சமுதாயத்தை ஈடில்லாத வகையில் முன்னேற்றி கொண்டிருப்பவர் அசத்துத்தீன் உவைஸி,
இதே நிலை தெலுங்கானா மாநிலத்தில் நீடித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் அகில இந்திய அளவில் மற்ற மாநில முஸ்லிம்களை விட தெலுங்கானா மாநில முஸ்லிம்கள் அனைத்து துறையிலும் முன்னிலையில் இருப்பார்கள்.
அரசியல் தலைவர் என்றால் தான் மட்டும் முன்னேறாமால் தன் சமுதாயத்தையே முன்னேற்றி விட வேண்டும்.
சமுதாயத்தை முன்னேற்றுவதில் #அஸதுத்தீன்_உவைஸி மிக சிறப்பாக செயலாற்றுகிறார்.
இதுதான் அவரை நேசிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.