செவ்வாய், 12 ஏப்ரல், 2016

உக்ரைனில் 2 இந்திய மாணவர்கள் கத்தியால் குத்திக் கொலை

உக்ரைனில் 2 இந்திய மாணவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.. 

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள உழ்கோரோட் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் இந்திய மாணவர்களை உள்ளூர் மாணவர்கள் நேற்று அதிகாலை கத்தியால் குத்தினர். இதில் பிரானாவ் சயின்தில்யா, அன்குர் சிங் என்ற இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த இந்திரஜித் என்ற மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திரஜித் அளித்த தகவல்களின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு பேசியதாக கூறியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் மாணவர்களின் சடலங்களை இந்தியா கொண்டு வர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.