ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

ஆசியாவின் அக்னிப்பிரவேசம்

ஆசியாவின் அக்னிப்பிரவேசம் "‪#‎பாரிஸ்டர்_அஸதுத்தீன்_உவைஸி‬ அவர்களுக்கு தமிழகத்தில் உற்சாக வரவேற்பு...!
**-**-**-**-**-**-**-**-**-**-**-**-**-**-**
அகில இந்திய மஜ்லிஸ் எ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தேசிய தலைவர், பாரிஸ்டர். அஸதுத்தீன் உவைஸி M.P அவர்கள் நேற்று காலை தமிழகம் வந்தார்.. தனது கட்சியான AIMIM யின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த உவைஸி...
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் காதர் பேட் ஈத்கா மைதானத்தில் நிரம்பி வழிந்த ஜனத்திரளுக்கு மத்தியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்...
* தமிழக மக்களின் இலவச மோகங்களை கண்டித்தவர்... அரசியல்வாதிகளிடம் இலவசங்களை கேட்காதீர்கள்.. தங்கள் குழந்தைகளின் வாழ்வாதாரங்களை கேளுங்கள் என்றார்..
* சிறுபான்மை மக்கள் வாழும் இடங்களில் கல்வி கற்கும் பள்ளிகள்,சுகாதார தேவைக்கான மருத்துவமனைகள் இருக்கிறதோ இல்லையோ மாறாக காவல்
நிலையங்கள் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகின்றன என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்..
* தமிழகத்தின் திராவிட கட்சி
களையும்,காங்கிரஸ் கட்சியையும் சாடியவர்., தமிழக அரசு சிறுபாண்மை மக்களின் நலன் களுக்காக ஒதுக்கும் நிதியின் விவரத்தை புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்தார்.. தமிழகத்தின் கடந்த ஆண்டு ஒட்டுமொத்த சிறுபாண்மை நிதி ஒதுக்கீடு 100 கோடி சொச்சம் என்றும் .. தெலுங்கானா அரசின் ஒதுக்கீடு 1600 கோடி ரூபாய் ஒதுக்கியதை ஒப்பீடு செய்து பேசினார்...
* 14 % இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கையில் 26 % அப்பாவி
முஸ்லிம்கள் சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருப்பதை வருத்ததுடன் கூறியவர் அதிகாரமியற்றும் சபைகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு அவசியம் என்பதை ஆணித்தரமாக பதியவைத்தார்...
* இந்திய சட்ட மேதை அம்பேத்கர் அவர்கள் கண்ட தலித மக்களின் விடியல் கனவு பூர்த்தியற்று இருப்பதை சுட்டிக்காட்டியவர் "இன்னமும் தலித் மக்களின் சடலம்" கூட சுதந்திரமாக எடுத்துச்செல்ல முடியாத நிலையில் இருப்பதை கவலையுடன் வெளிப்படுத்தினார்..
சுமார் ஒருமணிநேரத்திற்கும் அதிகமாக பேசிய உவைஸி அவர்கள் வாணியம்பாடியில் கூடிய மக்கள் கூட்டம் "தமிழகத்திற்கு மஜ்லிஸ் கட்சி அவசியம் என்பதை உணர்த்துகிறது இனி எனது கவனம் தமிழகத்தை நோக்கியும் இருக்கும் என்று பேசி தனது கட்சியினரை மகிழ்வடையச் செய்தார்...
தமிழக மஜ்லிஸ் கட்சி சார்பாக ‪#‎வாணியம்பாடி‬ மற்றும்‪#‎கிருஷ்ணகிரி‬ யில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts:

  • Money Rate - INR VS Top 10 Currencies   By popularity Currency Unit INR per Unit Units per IN… Read More
  • வெய்யில் காலத்தில் இரு சக்கர வாகனத்தில் வெய்யில் காலத்தில்அரை Tank மட்டுமே பெட்ரோல் நிரப்பவேண்டும்,ஏனெனில் பெட்ரோலில் உள்ள வாயு மூலக்கூறுகள் விரிவடைய இடம் இல்லா விட்டா… Read More
  • Water Sharing problem !!!!!!!!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு... ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக...… Read More
  • Salah time - Pudukkottai Dist Only Read More
  • முக்கண்ணாமலைப்பட்டி மக்களுக்கு ஒரு நற்ச்செய்தி நமதூர் மதினா பள்ளி அருகிள் கேஸ் சிலிண்டர்க்கான மானியம் பெருவதற்க்கான விண்ணப்பம் பூர்த்தி செய்து க… Read More