தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் அதிகரித்து வருவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் இந்து முன்னணி நிறுவனத் தலைவர் இராம.கோபாலன் புகார் தெரிவித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராம.கோபாலன் தில்லி வந்துள்ளார். இந்த நிலையில், மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜுவை அவரது அலுவலகத்தில் புதன்கிழமை இராம.கோபாலன் சந்தித்து மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் “ஜிஹாதி’ செயல்பாடுகள் பரவி வருகின்றன. மாநில எல்லையில் சமீப காலமாக தேச விரோத சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தின் மால்டாவில் ஏற்பட்ட வன்முறை போல அண்மையில் தமிழகத்தின் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஆம்பூரிலும் ஒரு சம்பவம் நடந்தது. ஆனால், அதை ஊடகங்கள் பெரிதாக வெளிச்சத்துக்கு கொண்டு வரவில்லை.
இராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேருவதற்கு தமிழக இளைஞர்களைக் கவரும் நடவடிக்கையிலும் அவை ஈடுபடுகின்றன. இந்த சக்திகளுக்குப் பின்னணியில் இருப்பது யார்? அவற்றை ஒடுக்க மாநில அரசும் காவல் துறையும் ஏன் தவறி விட்டன? என்பது குறித்து என்ஐஏ மூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவாமி வலியுறுத்தல்: தமிழகத்தில் அடுத்து வரவிருக்கும் புதிய அரசு, ஜிஹாதிகளை ஒடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேட்டுக் கொண்டார்.
சித்திரை முதல் நாள் நிகழ்வையொட்டி, தமிழ் கலாசார அமைப்பு சார்பில் “பன்முகப்பட்ட தமிழக அரசியல்’ என்ற பெயரில் சிறப்புச் சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில் “தமிழகத்தில் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் கொடூரத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். இந்த விஷயத்தில் மத்திய அரசை தலையிட வைக்க முயன்று வருகிறோம். தமிழகத்தில் அடுத்து வரவிருக்கும் புதிய அரசு, ஜிஹாதிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன்’ என்றார்.
ராமகோபாலன் மனு கொடுத்தது மீணவன் மீனுக்கு எதிராக கொக்கு விடம் முறையிட்டதைப்போன்று உள்ளது.
கொஞ்ச நாளைக்கும் இந்த ரெண்டுபேரும் மவுனமா இருந்தாலே நாடு விளங்கிடும்.