திராட்சை, திராட்சை பழ ரசம் இரண்டிலும், ‘ரெஸ்வெரட்டோல்’ எனப்படும், ‘ஆன்டி ஆக்சிடென்ட்’ அதிக அளவில் உள்ளது. இது செல்கள், திசுக்களில் ஏற்படும் சிதைவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. ‘கேன்சர்’ செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு, நிணநீர் சுரப்பிகள், கல்லீரல், வயிறு, மார்பகங்களில் புற்றுநோய் கட்டிகள் தோன்றுவதையும் கட்டுப்படுத்துகிறது. இதில் கவனிக்க வேண்டியது, பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்தாத திராட்சையை சாப்பிடுகிறோமா என்பதுதான்.
ஆப்பிள்
இதில் உள்ள, ‘ஆன்டி ஆக்சிடென்ட்’ பெண்கள் உடலில், ‘ஈஸ்ட்ரோஜென்’ சுரப்பதில் உள்ள குறைபாட்டிற்கு எதிராக செயல்பட்டு, மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.
தக்காளி:
இதில் உள்ள, ‘லைக்கோபின்’ என்ற ஒருவகை ‘ஆன்டி ஆக்சிடென்ட்’ ஆண்களுக்கு, ‘புராஸ்ட்ரேட்’ புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
பெர்ரி:
புளு பெர்ரி, ஸ்ட்ரா பெர்ரி உட்பட பெர்ரி வகை அனைத்தும், மரபியல் காரணங்களால் ஏற்படும் புற்றுநோயை கட்டுப்படுத்துகின்றன.
பழங்கள் தவிர, இஞ்சி, பூண்டு, மஞ்சள், கிரீன் மற்றும் பால் கலக்காத தேநீர், பலவகையான புற்றுநோய்களை கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன.