சனி, 2 ஏப்ரல், 2016

பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்க

ஐ தராபாத் : பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்க பெண்கள் குட்டை பாவாடை அணிய வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக சுடிதார் போட்டு கொள்ளுங்கள் என்றும் தெலுங்கானாவை சேர்ந்த பெண் எம்எல்ஏ., சுரேகா கூறியுள்ளார்.
தெலுங்கான ராஷ்ட்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த வாரங்கல் தொகுதி பெண் எம்எல்ஏ., சுரேகா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்: பள்ளிகளில் 10 ம் வகுப்பு முதல் மேல் படிப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு சீருடையில் ஒரு கடினமான ஒழுங்கு முறை கடைபிடிக்க வேண்டும்.
குட்டை பாவாடைகள் அகற்றப்பட்டடு அதற்கு பதிலாக சுடிதார் அணிய வேண்டும். இந்த உடை உடல் முழுவதும் மறைப்பதுடன், நாகரிகமாகவும் இருக்கும். மேலும் பாலியல் துன்புறுத்தில் மற்றும் கவர்ச்சி இழுப்பு ஆகியற்றில் இருந்து பெண்கள் தங்களை காத்து கொள்ள முடியும். இதற்கென ஒரு உத்தரவை போட்டு பள்ளிகளில் கடைப்பிடிப்பது கண்டிப்பாக்கப்பட வேண்டும் இவ்வாறு சுரேகா கூறியுள்ளார் .