தமிழகத்தின் மயிலாடுதுரை அருகில் வடகரை என்ற ஊரை சேர்ந்த சலீம் என்ற சகோதரர் விடுப்பில் தாயகம் சென்று மீண்டும் குவைத் நாட்டிற்கு வருகையில் குவைத் விமாண நிலைய காவல்துறை அதிகாரிகளால் கைதாகி உள்ளார் என்ற செய்தியினை தமுமுக குவைத் மண்டல இரத்த தான பிரிவு செயலாளர் ஆக்கூர் முஜிபுரஹ்மான் அவர்கள் மண்டல தலைமை நிர்வாத்திடம் தகவல் தந்ததின் அடிப்படையில் கைதான அப்பாவி தமிழக சகோதரரை மீட்டெடுக்கும் பணியில் களமிறங்கியது தமுமுக குவைத் மண்டலம்.
இது தொடர்பாக அச்சகோதரர் பாஸ்ப்போர்ட் மற்றும் அவர் தொடர்புடைய ஆவணங்களை சேகரித்து நேற்றைய தினம்#தமுமுக_மமக_குவைத்_மண்டல தலைவர் தஞ்சை ஃபாரூக் மஹராஜ் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் கொடிநகர் கஜ்ஜாலி ஆகியோர் குவைத்தில் உள்ள இந்திய தூதரம் சென்று தூதரக அம்பாஸிடர் மற்றும் தூதரக செயலாளர் இருவரையும் சந்தித்து அப்பாவி சகோதரரின் கைது பற்றியும் அவரை மீட்பது பற்றியும் தகவல் தெறிவித்ததோடு சகோதரரின் பாஸ்போர்ட் ஜெராக்ஸ் போன்ற ஆவணங்களை தூதரக அதிகாரிகளிட் சமர்பித்து. துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுகொன்டர்.
விமாண நிலையத்தில் கைது செய்யப்பட்ட சகோதரர் எதற்க்காக, என்ன காரனத்திற்க்காக கைத்து செய்யபட்டார் அவர் மீது என்ன வழக்கு பதிவு செய்யப்டுள்ளது என்ற எந்த அகாரப்பூர்வமான முழு உண்மை தகவல் வெளிவரவில்லை .
இது பற்றி இந்திய தூதரக அதிகாரிகள் இரண்டு நாட்ககளுக்குள் குவைத் அரசாங்க காவல் துறை மேல் அதிகாரிகளிடம் சகோதரர் வடகரை சலீம் கைது ஏன் என்பது பற்றி விசாரணை செய்து முழுதகவல்கள் தருவதாகவும் அப்பாவி இளைஞரை மீட்டெடுக்க முழு ஒத்துழைப்பு இந்திய தூதரகம் தரும் என்றும் மண்டல தலைவர் தஞ்சை ஃபாரூக் மஹராஜ் அவர்களிடம் கூறிஉள்ளனர்..
குவைத்திற்க்கு பிழைப்பு தேடி வரும் ஏனைய மக்கள் இதுபோன்று எதிர்பாறாதவிதமாக பலசிக்கள்களில் சிக்கி தவித்தர்களை மீட்டெடுத்து தாயகத்திற்கு அனுப்பி வைக்க வீரியத்தோடு செயல்பட்டு வரும் தமுமுக. சகோதரர் சலீம் அவர்களை மீட்டெடுப்பதற்கான பணகளிலும்
களமிறங்கி பணி செய்து வருகிறது . சகோதரர் சலீம் அவர்களை விறைவில் மீட்டெடுக்க வல்ல இறைவனிடம் துவா செய்ய வேண்டுமென கேட்டுகொள்ளபடுகிறது.
களமிறங்கி பணி செய்து வருகிறது . சகோதரர் சலீம் அவர்களை விறைவில் மீட்டெடுக்க வல்ல இறைவனிடம் துவா செய்ய வேண்டுமென கேட்டுகொள்ளபடுகிறது.
இவன்
என்றென்றும் மக்கள் பணியில்
சமுதாய ஊழியர்கள்
சமுதாய ஊழியர்கள்
தமுமுக மமக குவைத் மண்டலம்