மீண்டும் ஆயுள் தண்டனை.
18 ஆண்டுகளைக் கழித்தவர்களுக்கு
மீண்டும் ஆயுள் தண்டனை.
பாவிகளின் சட்டம், பாவமான தீர்ப்பு.
யா அல்லாஹ். தாங்கிக்கொள்ள முடியாத சோதனையை எம் மக்களுக்கு வழங்கிவிடாதே.
பல விதமான நோய்கள், உடல் ரீதியான, மன ரீதியான வேதனைகளிலும், குடும்பச்சிக்கல்களிலும் அச்சிறைக்கொடுமைகளில் வாழ்ந்துவருகிறார்கள்.
யாரப் ! இனியும் உன் அருள்கிருபையைத்தான் எதிர்பார்க்கிறோம்.
காலம் கனிந்து கனிந்து கண்டவர்களையும் அறியனை ஏத்துவதிலே பல இயக்கத் தலைவர்கள் குறியாக இருந்தால்
எங்களின் துஆவிற்கு அஞ்சிக்கொள்ளுங்கள் என சிறை சகோதரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புனிதமிகும் உன் இல்லத்தில் இருந்து நாமும் பிரார்த்திக்கிறோம்.
யா அல்லாஹ் ஜாஹிலிய்யாவுக்கு வெற்றியை வழங்காதே.
யா அல்லாஹ் நீ உம்மத்திற்கென்று வழங்கியுள்ள தனிப்பட்ட கண்ணியத்தை வழங்கி, அதை ஈமான் கொண்டவர்களின் கண்களில் காட்டு.
ஒரு தலைமைத்துவத்தை தமிழக முஸ்லிம்களுக்கு வழங்கு.
அவர் உன் வேதத்தையும் உன் தூதரையும் முழுமையாக பின்பற்றி, அதனடிப்படையில் இச்சமூகத்தை வழிநடாத்தக்கூடியவராக ஆக்கியருள்வாயாக !
இறைவா ! ரகசியங்களையெல்லாம் அறிந்தவன் நீ !,
சூழ்ச்சிக்காரனுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் நீ !
சிறைவாசிகளின் விடயத்தில் துரோகம் இழைத்தால் அது நானாக இருந்தாலும் சரி, வேறு எவராக இருந்தாலும் சரி அல்லாஹ் ஒருவரையும் விட மாட்டான்.
யா அல்லாஹ் என்னிடமிருந்து ஏதேனும் குறைகள் ஏற்பட்டிருப்பின் என்னை மன்னித்து விடு.!