ஹரியானா மாநில அரசு, குர்கான் மாவட்டத்தின் பெயரை குருகிராம் என மாற்றியுள்ளது.
ஒருகாலத்தில், குரு கிராம் என அழைக்கப்பட்ட குர்கான் தற்போது, மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பிராந்தியமாக உள்ளது. இந்நிலையில், இதன் பெயரை மாற்ற, ஹரியானா மாநில அரசு முடிவு செய்தது. இதன்படி, ஆதி பெயரான குரு கிராம் என்பதையே, புதிய பெயராக சூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, குர்கான் மாவட்ட இணையதள பக்கத்தில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்திற்குள் இருந்தாலும், டெல்லியின் புறநகர்ப்பகுதியாக, விளங்கும் குர்கான் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.