புதன், 13 ஏப்ரல், 2016

லிபியாவில் தலையீடு செய்தது மிகப்பெரிய தவறு: ஒபாமா வருத்தம்


லிபியா நாட்டின் உள்விவகாரத்தில் தலையீடு செய்தது மிகப்பெரிய தவறு, என அமெரிக்க அதிபர் ஒபாமா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு ஒபாமா அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:
 
கடந்த 2011ம் ஆண்டில், மம்மர் கடாஃபி தலைமயிலான லிபியா மீது நேட்டோ படையினர் நடத்திய தாக்குதல் எனது பணிக்காலத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய தவறான சம்பவமாகும். இந்த விவகாரத்தில் சரிவர திட்டமிடாமல் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் செயல்பட்டன. இதனால், கடாஃபி கொல்லப்பட்டார்.
அதற்குப் பின்னரே, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் லிபியாவில் வேரூன்ற தொடங்கினர். அங்கிருந்து படிப்படியாக, இதர நாடுகளுக்கும் பரவ தொடங்கிய அந்த அமைப்பு, தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக, உருவெடுத்துள்ளது. இதே நிலைதான் தற்போது சிரியாவிலும் காணப்படுகிறது. அதனால், மிகவும் நிதானமாக, சிரியா விவகாரத்தை கையாண்டு வருகிறோம்.
இவ்வாறு அதிபர் ஒபாமா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

download (18)