திங்கள், 6 ஜூன், 2016

தாடியை நீக்க மறுத்த முஸ்லிம் இராணுவ வீரர் பணியிலிருந்து டிஸ்மிஸ். ராணுவத்திலும் காவி வெறி!


-குறிச்சி சுலைமான்
தாடியை நீக்க மறுத்த முஸ்லிம் இராணுவ வீரர் 14 நாட்கள் சிறையில் அடைக்கப் பட்டும் நீக்க மறுத்ததால் பணியிலிருந்து டிஸ்மிஸ்.
சீக்கியர்களுக்கு மட்டுமே தாடி வைக்க அனுமதி, மற்றவர்கள் வளர்த்தால் ராணுவத்தின் கட்டுப்பாடு குலைந்து விடும். இந்திய இராணுவத் தலைமை விளக்கம்.
பாதிக்கப் பட்ட இராணுவ வீரர் மக்தூம் உசேன் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப் பட்டதால் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளார்.
சும்மா இருந்தாலும் தேச விரோத குற்றச் சாட்டு, இராணவத்துல சேர்ந்தாலும் அற்ப காரணங்களுக்காக டிஸ்மிஸ். மதச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசமைப்பு சாசன சட்ட விதிகளை அப்பட்டமாக மீறும் இந்திய இராணுத்துக்கு உச்ச நீதிமன்றமாவது கடிவாளம் போடுமா ?
அமெரிக்கா,இங்கிலாந்து உள்ளிட்ட உலகத்தின் பல்வேறு நாடுகளின் இராணவங்களில் முஸ்லிம்கள் தாடி வைக்க அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது. மதச்சார்பற்ற ? தேசத்தின் நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
*காவி உடையில் கையில் துப்பாக்கி வைத்திருக்கலாம் கைது கிடையாது தேச பக்தர் என மரியாதை கொடுக்கப்படும்.
*தொப்பியுடன் பிளேடு வைத்து திரிந்தாலும் அவனை தீவிரவாதி என முத்திரை குத்தி பல ஆண்டுகள் சிறை.
*சீக்கியன் கையில் கத்தியும், முகத்தில் தாடியும் வைக்கலாம்...
ராணுவத்திலும் அனுமதி....
*முஸ்லிம் தொப்பியோ தாடியோ வைக்கக் கூடாது அனுமதியும் இல்லை...
ஆம் இந்தியா மதச்சாற்பற்ற நாடுதான்....
"சீக்கியர்களுக்கு மட்டுமே தாடி வைக்க அனுமதி, மற்றவர்கள் வளர்த்தால் ராணுவத்தின் கட்டுப்பாடு குலைந்து விடும்"
கேவலம் இந்தியா மதச்சாற்பற்ற நாடு என இனியும் கூறாதீர்கள்...