/indian-express-tamil/media/media_files/2026/06/25/vaithilingam-rangamsamy-2026-06-25-08-05-13.jpg)
புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.15,000 கோடி சிறப்பு நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பது குறித்து முதல்வர் ரங்கசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரிக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.15,000 கோடி சிறப்பு நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பது குறித்து முதல்வர் ரங்கசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், கல்வித்துறை குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
25 6 2026
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாணவர் சமுதாயம் நாட்டில் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தை நிர்ணயம் செய்ய கூடிய நேரத்தில் மத்திய அரசு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி, மாணவர்கள் மத்தியில் நிலையற்ற தன்மையை உருவாக்கி, அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் மூலம் பல்வேறு குளறுபடிகளை செய்து, தேர்வு முறையை கேள்விக்குறியாக்கும் நிலை உள்ளது. இந்த குளறுபடிகளை மாணவர்களே முழுமையாக ஆய்வு செய்து வெளிக் கொண்டு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குளறுபடிகளை உருவாக்கிய நிர்வாகத்தை மாற்றியுள்ளனர். இதுவே அவர்கள் தங்கள் குறைபாடுகளை ஒப்பு கொண்டுள்ள நிலைப்பாடு.
நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு எழுதிய பின்னர் விடைத்தாள் மாற்றப்பட்ட நிலைப்பாடு, விடைத்தாள் திருத்தம் டெண்டர் முறைகேடு என பல்வேறு முறைகேடுகளை மாணவர்களை முன்னின்று கண்டுபிடித்து வெளி கொண்டுவந்துள்ளனர். இதனால் இளைய சமுதாயம் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய கூறுகிறது. பிரதமர் மோடியும் இதற்கான காரணத்தை கூறவில்லை. நிர்வாக சீர்கேடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இளைய சமுதாயம் மத்திய அரசின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6 முதல் 8 வரை
என்று கூறிய மூன்றாவது மொழி கட்டாயம் கற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை 10ம் வகுப்பு வரை என மாற்றியுள்ளனர். புதுவை மாணவர்களுக்கு விருப்பப்படாமாக இருந்த பிரெஞ்ச் தரப்படவில்லை. இது தொடர்பாக முதல்வவ் கடிதம் எழுதியும்கூட இதுவரை பதில் தரவில்லை. மத்திய அரசின் தவறுகளை தட்டி கேட்கும் மாணவர்கள் மீது அடக்கு முறை கையாளப்படுவதை கண்டிக்கிறோம். மாணவர்களுக்கு பாதுகாப்பு, எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும்.
புதுவையில் பிரதமர் மோடி 12 ஆண்டு சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் எல்.முருகன் புதுச்சேரிக்கு ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு நிதியாக பிரதமர் மோடி தந்துள்ளதாக கூறியுள்ளார். அவர்கள் கொடுத்த ரூ.15 ஆயிரம் கோடியை முதல்வர் என்ன செய்தார் என்று விளக்கம் அளிக்க வேண்டும். அனைத்து அதிகாரத்தையும் முதல்வரிடம்தான் உள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டாலும் துறைகளை ஒதுக்க 3 மாதம், முதல்வர் ரங்கசாமியின் சர்வாதிகார போக்கிற்கு சட்டசபை, அமைச்சரவை இதெல்லாம் தேவையில்லை. இவரே முழுமையாக நடத்தலாம்.” இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
source https://tamil.indianexpress.com/india/puducherry-congress-vaithilingam-questions-cm-rangasamy-over-15000-crore-funds-12070139





