தமிழகத்தில் எந்த கொலை நடந்தாலும் அதனை மலிவான அரசியல் லாபத்திற்காக மத கலவரமாக மாற்றி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் H.ராஜா மற்றும் காடேஸ்வரன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்ய கோரி இந்திய தேசிய லீக் கட்சி தமிழக டிஜிபியிடம் மனு
ஓசூர் சூரி கொலை மற்றும் திண்டுக்கல் சங்கர் கணேஷ் மீதான தாக்குதலை மைய்யப்படுத்தி ஊடகங்களிலும்,சமூக வளைதளங்களிலும் H. ராஜா போன்றவர்கள் தொடர்ந்து விசமப்பிரச்சாரம் செய்ததன் விளைவாகவே கோவை சசி குமார் கொலைக்குப்பின் கோவை வன்முறை காடானது என்பதை சுட்டிக்காட்டியும்,அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலையில் கோவையில் போத்தனூரில் பள்ளிவாசல் மற்றும் வீடுகளில் இந்துத்துவா பயங்கரவாதிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதையும், இதற்கு காரணமான H. ராஜா மற்றும் தமிழகத்தை குஜராத்தாக மாற்றுவோம் என பேசிய இந்து முன்னணியே சேர்ந்த காடேஸ்வரன் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா. ஜெ. அப்துல் ரஹீம் இன்று காலை சென்னையில் காவல்துறை தலைமை இயக்குநரிடம் (டிஜிபி) மனு அளித்தார்
உடன் மாநில செயலாளர் ரசூல் மொய்தீன் மற்றும் தென்சென்னை மாவட்ட தலைவர் அப்ரோஸ் பாஷா
உடன் மாநில செயலாளர் ரசூல் மொய்தீன் மற்றும் தென்சென்னை மாவட்ட தலைவர் அப்ரோஸ் பாஷா
தகவல்
இந்திய தேசிய லீக் கட்சி
ஊடக பிரிவு
இந்திய தேசிய லீக் கட்சி
ஊடக பிரிவு