மத்திய பிரதேசத்தில் கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட முஸ்லிம் குடும்பத்தினரை காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக சித்தரவதை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் சிங்கர்ச்சுரி பகுதியை சேர்ந்தவர் சப்னம்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவரது மருமகள் சமீபத்தில் காணாமல் போய்விட்டார். இதனையடுத்து அப்பெண்ணின் சகோதரர் அப்பெண்ணை கண்டுபித்து தருமாரு ஹபியஸ் கார்பஸ் மனு அளித்துள்ளார். மேலும் சித்திக்கஞ் காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து 15 நாட்களுக்கு ஷப்னம், அவரது கணவர், மகன், மற்றும் நான்கு சிறுவர்களை சித்திக்கஞ் காவல்துறையினர் சட்டவிரோத காவலில் வைத்து சித்தரவதை செய்துள்ளனர். இந்த சித்திரவதையின் போது ஒருவரது சிறுநீரை மற்றவர்களை குடிக்கச் செய்தும் உறவினர்களுக்கிடையே இயற்கைக்கு மாறான உறவுகளை செய்ய கட்டாயப்படுத்தியும் சித்திரவதை செய்துள்ளதாக ஷப்னம் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சித்திரவதைகளை தாங்க முடியாமல் ஷப்னமின் மகன் தான் அப்பெண்ணை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதோடு காவல்துறையினரை அருகில் உள்ள ஒரு சுடுகாட்டிற்கு அளித்துசென்றுள்ளதாக தெரிகிறது. அங்கிருந்து மூன்று சடலங்கள் தோண்டி எடுத்துள்ளனர் காவல்துறையினர். ஆனால் எதுவும் காணமல் போன பெண்ணுடையது அல்ல என்று தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இது தொடர்பாக சித்திக்கஞ் காவல்துறையினர் மீது முதலமைச்சர் அலுவலகத்திடமும், டி.ஜி.பி அலுவலகத்திலும், மாநில மனித உரிமை கமிஷனரிடமும், மாவட்ட எஸ்.பி. இடமும் டி.ஐ.ஜி. இடமும் ஷப்னம் புகாரளித்துள்ளார். ஆனால் இதில் எதுவும் அவருக்கு பலனளிக்கவில்லை. மாறாக ஷப்னம் சித்திரவதை செய்யப்பட்ட சித்திக்கஞ் காவல்நிலைய அதிகாரி ராகேஷ் ஷர்மா இந்த புகார்களை கைவிடுமாறும் இல்லையென்றால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போயிருந்த அப்பெண்ணின் உடலை கடந்த செப்டெம்பர் மாதம் 19 ஆம் தேதி போபாலில் அப்பெண்ணின் உறவினர்கள் கண்டெடுத்துள்ளனர்.