ஞாயிறு, 9 அக்டோபர், 2016

கடலூர் அருகே இளம்பெண் யாஸ்மின் கத்தியால் குத்தி படுகொலை!

கடலூர் : வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை மர்மநபர் கத்தியால் குத்தி கொலை செய்து அவரது நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வசித்து வருபவர் சுலைமான். இவரது மனைவி யாஸ்மின்(20). சுலைமான் ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகிறார்.இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை .
 

இந்த நிலையில் நேற்று சுலைமான் வேலைக்கு செல்லவே ,வீட்டில் யாஸ்மின் மட்டும் தனியாக இருந்திருக்கிறார் . யாஸ்மீன் தெருவிற்கு அருகிலுள்ள தெருவிலுள்ள யாமீன் தாய் இவர்களது வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டிலுள்ள அறை ஒன்றில் யாஸ்மீன் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது ஆடைகள் அலங்கோலமாகவும் , நகைகள் கொள்ளையடிக்கப்பட்டும் இருந்தது கண்டு யாமீனின் தாய் கதறி அதிர்சசி அடைந்து கதறி அழுதார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தகவல் கொடுக்கபட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ரூட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts: