வியாழன், 1 டிசம்பர், 2016

சென்னையை நெருங்கும் நாடா புயல்'.......... 350கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது..!

வங்கக் கடலில் உருவாகியுள்ள நாடா புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில் உள்ளது என வானிலை ஆய்வு மையம் என்ன தெரிவித்திருக்கிறது.
வங்கக் கடலில் கடந்த 29 - ஆம் தேதி உருவான நாடா புயல் வலுப்பெற்றுள்ளதால் கடலோ‌ர மாவட்டங்களில் கன‌மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rain
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது நாடா புயல் தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது எனவும், இது சென்னையிலிருந்து தென்கிழக்கே 350 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 290 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் இந்த புயல் நகர்ந்து வருகிறது.
நாடா புயல் நாளை அதிகாலை புதுச்சேரி- வேதாரண்யம் அருகே கடலூரில் கடலை கடக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. காற்றின் வேகம் அதிகரிப்பதினால் இந்த மழையின் அளவு சற்று வலுக்குறைய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கடந்தும் கூட தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், வேதாரண்யம் போன்ற டெல்டா மாவட்டங்களில் மட்டுமின்றி, ஆந்திரா, பெங்களூர் போன்ற இடங்களிலும் மழையின் அளவு சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் கடல்சீற்றம் அதிகரித்து காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.