வியாழன், 1 டிசம்பர், 2016

KURKURE உயிரை பறிக்கும் பாக்கெட் உணவுகள் உண்ணாதீர்கள்


சென்னையில் பள்ளி மாணவர் ஒருவர், குர்குரே தின்பண்டத்தை உண்டு இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது
சென்னை அடையாறில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஸ்ரீஷ் சேவியோ. இவர் நேற்று முன்தினம் உயிரிழந்ததையடுத்து பள்ளி நிர்வாகம் நேற்று விடுமுறை அறிவித்தது.
இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் தகவல் ஒன்றை பள்ளி நிர்வாகம் அனுப்பியிருந்தது. அதில் மாணவர் சேவியோ, குர்குரே உண்டதாகவும் இதைத் தொடர்ந்து ஈனோ எனப்படும் அஜீரணம் குணமாக்கும் பானத்தை அருந்தியதாகவும் இதன் பின் உடனடியாக அம்மாணவர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே இது போன்ற ஜங்க்ஃபுட் வகை பண்டங்களை பிள்ளைகளுக்கு தராதீர்கள் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இத்தகவலை மாணவனின் உறவினர்கள் சிலரும் கூறியுள்ளனர். ஆனால் மாணவனின் பெற்றோர் இறப்புக்கான காரணம் பற்றி எதுவும் கூறவில்லை.