கணக்கில் வராத ரூ.13,860 கோடியை தாமாக முன்வந்து தெரிவித்து விட்டு, காணாமல் போன ரியல் எஸ்டேட் அதிபரை வருமான வரித் துறையினர் கைது செய்தனர்.அகமதாபாத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மகேஷ் ஷா, தாமாக முன்வந்து கணக்கில் வராத வருவாயைத் தெரிவிக்கும் திட்டத்தின்கீழ் அண்மையில் தம்மிடம் ரூ.13,860 கோடி இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, அவரது பங்களாக்கள், அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் ஆய்வு நடத்தினர். ஆனால், மகேஷ் ஷா தலைமறைவானார். இந்த நிலையில், அகமதாபாத்தில் வருமான வரித் துறையினரிடம் இன்று மாலை சிக்கிய மகேஷ் ஷாவிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கமிஷனுக்கு ஆசைப்பட்டே அந்த பணம் குறித்த தகவலை தாம் வருமானவரித்துறையினரிடம் தெரிவித்ததாக மகேஷ் ஷா ஒப்புக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த பணம் முழுவதும் தம்முடையது இல்லை என்றும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
December 03, 2016 - 08:52 PM