சனி, 10 டிசம்பர், 2016

24 ஆயிரம் ரூபாயை கூட மக்களுக்கு தர இயலாதது ஏன்? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

மக்கள் வங்கிகளில் இருந்து ஒரு வாரத்திற்கு, 24 ஆயிரம் ரூபாயை மட்டுமே எடுக்கலாம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகையைக் கூட தர இயலாதது ஏன் என மத்தியஅரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் தொடர்ந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகையை வழங்க முடியாதது ஏன் என்று விளக்கம் தருவதுடன் மாவட்ட கூட்டுறவு வங்கிகள் பழைய ரூபாய் நோட்டுகளை ஏற்கலாமா என்பது குறித்தும் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது தவிர ரூபாய் விவகாரத்தில் சட்ட ரீதியாக மேலும் பல கேள்விகளை‌யும் அரசிடம் நீதிபதிகள் கேட்டனர். இதையடுத்து வரும் 14ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.