ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள 9 கேள்விகளைப் பார்க்கலாம்.
* ரூபாய் மதிப்பிழக்கச் செய்யும் அறிவிப்பு, ரிசர்வ் வங்கியின் எந்தச் சட்டத்தின்கீழ் வெளியிடப்பட்டது?
* ரிசர்வ் வங்கி சட்டத்தின் 26-ன் கீழ், ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கும் அதிகாரம் முரணானதா?
* தனக்கு சொந்தமான சொத்துக்களை அனுபவிப்பதை யாரும் தடுக்க முடியாது என்ற 300ஏ பிரிவுக்கு எதிரானதா?
* அரசியல் சாசனத்தின் 14-ஆவது பிரிவின்படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு புறம்பானதா?
* சட்டப்பூர்வமான பணத்தை எடுக்க வங்கிகள் அனுமதி மறுப்பது அடிப்படை உரிமைகளை மீறுவதாகாதா?
* இந்த அறிவிப்பின் நடைமுறைத் தோல்விகள் மக்களை பாதிக்காதா?
* நடைமுறைப்படுத்தும்போது தோல்வி ஏற்பட்டால் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவது ஆகாதா?
* ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைவிட இந்த அறிவிப்பால் கூடுதல் அதிகாரம் பயன்படுத்தப்பட்டதா?
* ரூபாய் நோட்டு விவகாரத்தில் கூட்டுறவு வங்கிகளுக்கு தடை விதிக்க முடியுமா?
இத்தகைய 9 கேள்விகளை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது.
பதிவு செய்த நாள் : December 17, 2016 - 08:50 AM