பிரான்ஸில் வசிக்கும் தமிழக பெண் தமிழச்சி அவ்வப்போது வலைதளம் மூலம் ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்புவார்.
சுவாதி கொலை, ராம்குமார் மரணம் என தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்தும் பல அதிர்ச்சிகரமான தகவல்களை கூறி வந்தார்.
இந்நிலையில் தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாட்டுக்குள் பதட்டத்தை ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்கி ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும்” என்ற மத்திய அரசு திட்டத்திற்கு தமிழர்கள் துணை போக வேண்டாம்.
தமிழக மக்களின் பதட்ட நிலையை தவிர்க்க வேண்டுமானால், ஜெயலலிதா உடல்நிலை குறித்த அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
கடந்த இரண்டு மாதங்களாக ஜெயலலிதாவை யாரிடமும் காட்டாத மர்மத்தின் நோக்கத்தை குறித்து இனி ஆராயத் தேவையில்லை.
ஆனால் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையை தவிர்க்க வேண்டும்.
இல்லாவிட்டால் மத்திய அரசின் சூழ்ச்சிக்கு தமிழர்கள் பலியாக நேரிடும்!” என்று தெரிவித்துள்ளார்.