தந்தி டி.வி யை தடை செய்ய வேண்டும் !! கிரிக்கெட் வீரர் ஜடேஜா
முதல்வர் ஜெயல்லிதா குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வீர்ர் ஜடேஜா ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக இன்று மாலை பெரும்பாலாக அனைத்து ஊடகங்களும் செய்தி பரப்பின.ஆனால் இந்த செய்தியை அப்பல்லோ நிர்வாகம் மறுத்ததை தொடர்ந்து இந்த செய்தியை முதலில் பரப்பியதாக தந்தி டி.வி ரங்கராஜ் பாண்டேவிற்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் அவருக்காக தொடர்ந்து பிரார்த்திப்போம் என்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ட்விட்டரில் தந்தி டி.விக்கு எதிராக உருவாக்கப்பட்ட #RIPTHANTHITV என்ற ஹேஸ் டேக்கையும் பதிவு செய்து தந்தி டிவிக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.