நவம்பர் 8ஆம் தேதி இரவும் மக்கள் அனைவரும் தங்களது வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் வேளையில், அவரச நாடாளுமன்ற கூட்டத்தை முடித்து விட்டு பிரதமர் இனி இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் பண மதிப்பிழப்பு உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் மத்தியிலும் மாறுப்பட்ட கருத்துக்களைப் பார்க்க முடிந்தது.
இவை அனைத்திற்கும் மேலாக முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம், மோடி அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை, 2016ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஊழல் எனக் குறிப்பிட்டுள்ளார். ப.சிதம்பரம் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நாக்பூரில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், நாட்டில் 45 கோடி மக்கள் தினக்கூலிகள்.
குறிப்பாகப் பால்காரர், துணி துவைப்பவர் மற்றும் விவசாயிகள், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பண மதிப்பிழப்பு என்பது யோசனையே இன்றி எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை, என்றும் பிரதமர் செய்தது மிகப்பெரிய ஊழல் என்று குறிப்பிட்டுள்ளார்.
10 கேள்விகள் மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு அறிவிப்பு குறித்து 10 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதற்கு மோடி பதில் அளிப்பாரா..? அப்படி என்ன கேள்வி கேட்டார் ப.சிதம்பரம்.
கேள்வி 1 நவம்பர் 8ஆம் தேதி மோடி பேசிய போது, இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என 10க்கும் அதிகமுறை வலியுறுத்திய நிலையில், அடுத்தச் சில நாட்களில் பண மதிப்பிழப்பு இலக்கு மாறிவிட்டது. தற்போது டிஜிட்டல் பொருளாதாரம், பணமில்லா சமுகம் என்ற வகையில் மாறியுள்ளது. ஏன் இந்தத் திடீர் மாற்றம்.?
கேள்வி 2 மக்கள் மட்டும் அல்லாமல் என்னால் கூட ஒரு 2000 ரூபாய் நோட்டைப் பெற முடியாத நிலை நிலவும் போது, வருவாய் துறை செய்யும் சோதனையில் மட்டும் எப்படிப் பல கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் சிக்குகிறது. இதற்கு யார் காரணம்.?
கேள்வி 3 மத்திய அரசு பணப் பரிமாற்றத்திற்குத் தேவையான ரூபாய் நோட்டுகள் நாட்டில் உள்ளது எனத் தொடர்ந்து குறிப்பிட்டு வரும் நிலையில், வங்கிகளில் ஏன் பணமில்லை.?
கேள்வி 4 மோடியை எதிர்த்து யாரும் கேள்வி கேட்காமல் இருப்பது போல், பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்குவது குறித்தும் யாரும் கேள்வி எழுப்பவில்லை இது மத்திய அரசுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.
கேள்வி 5 இந்தியாவில் இயற்கை சீர்ற்றம் அடையும்போது கூட மக்கள் குறைவான அளவில் மட்டுமே பாதிக்கப்பட்டனர். ஆனால் பண மதிப்பிழப்பு மூலம் அதிகளவிலான பாதிப்புக்குள்ளானது நாம் அனைவரும் நேரடியாகப் பார்த்தோம்.
கேள்வி 6 பண மதிப்பிழப்பு குறித்து லேக்சபாவில் விவாதம் செய்யும் போது மோடி இல்லாதது ஏன்?
கேள்வி 7 எந்த நாடு பணமில்லா பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. உலகின் மிக வலிமையான பொருளாதார அமைப்பைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர், அமெரிக்கா கூட முழுமையான பணமில்லா பொருளாதாரத்தைக் கொண்டு இல்லை. இப்படி இருக்கும் நிலையில் பல துறைகளில் முன்னேற்றம் தேவைப்படும் இந்தியாவில் பணமில்லா பொருளாதாரத்தைத் தற்போது அவசியமா.?
கேள்வி 8 பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் அனைத்தும் ரகசியமாகச் செய்யப்பட்டது என்றாலும், இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் பற்றியேனும் யஷ்வந் சின்கா-விடம் ஆலோசனை செய்திருக்கலாம். அவர் அவருடைய கட்சிக்காரர் தானே.? அதை ஏன் செய்யவில்லை. யஷ்வந் சின்கா, அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது நிதியமைச்சராக இருந்தவர்.
கேள்வி 9 தற்போதைய நிலையைப் பார்க்கும்போது கூடிய விரைவில் 2000 ரூபாய் நோட்டுகளைக் கூட மத்திய அரசு செல்லாது என அறிவிக்கலாம் என்று ப.சிதம்பரம் கூறினார். இதே கருத்தை தான் குருமூர்த்தியும் கூறினார். படிக்க.
கேள்வி 10 இந்தியாவில் தற்போது பணமில்லா பரிமாற்றங்களின் அளவு வெறும் 3 சதவீதம் தான். இந்நிலையில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு அறிவிப்பின் மூலம் எப்படிச் சில மாதங்களில் 100 சதவீதம் பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்க முடியும். முற்றிலும் நம்ப முடியாத செயல் திட்டம்.