வியாழன், 28 டிசம்பர், 2017

“அலைக்கற்றை ஏலம் என்றால் என்னவென்று தெரியாத மன்மோகன் சிங்...” : ஆ.ராசா December 28, 2017

Image

2 ஜி ஒதுக்கீடு குறித்து விபரம் புரியாமல் இருந்ததற்கான பலனை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுபவித்ததாக ஆ.ராசா தெரிவித்துள்ளார். 

தொலைத்தொடர்பு துறையின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, 2 ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து நீலகிரி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆ.ராசா, தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்திய தன்னை கைது செய்து சிறையில் அடைத்து திமுக வையும் பழிவாங்கியதாக குற்றம்சாட்டினார். 

2ஜி ஒதுக்கீடு குறித்து விபரம் புரியாமல் இருந்ததற்கான பலனை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுபவித்ததாக சாடிய ஆ.ராசா, அலைக்கற்றை ஏலம் என்றால் என்னவென்று தெரியாத மன்மோகன் சிங், தன்னை கைது செய்தால், எல்லாம் சரியாகிவிடும் என நினைத்ததாகவும் குற்றம்சாட்டினார்.

பார்வையற்றவர்கள் யானையை தடவியதை போல், புலனாய்வு அமைப்புகள் வழக்கை தவறாக கையாண்டதாக ஆ.ராசா புகார் தெரிவித்தார்.

Related Posts: