நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்கிறது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, கரியாப்பட்டினம், கருப்பம்புலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த வருடம் இதுவரை போதிய மழை இல்லாத காரணத்தினால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது. மேலும் விவசாயமும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பதிவு செய்த நாள் : December 20, 2016 - 08:39 AM