திங்கள், 2 மே, 2022

இந்தியாவில் கிறிஸ்துவம் இந்துத்துவத்தை ஆதரிக்கிறது’ – திருமாவளவன்

 

இந்தியாவில் கிறிஸ்துவம் இந்துத்துவத்தை ஆதரிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கௌதம சன்னா, அம்பேத்கர் குறித்து தொகுத்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில சிறுபான்மையினர் நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் மகேந்திரன், நடிகர் பொன்வண்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய திருமாவளவன், தேர்தலில் ஒரு முறை கூட தனித்து போட்டியிடாமல் கூட்டணியில் பங்கு பெறக் கூடிய வாய்ப்பு உள்ள திறமையுள்ள கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி எனக் கூறினார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் கூட்டணி வைக்க அனைவரும் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் இந்துத்துவத்தை கிறிஸ்துவம் ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு பேசுகிற மோசமான செய்திகளை கேட்கிற போது அதிர்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/christianity-supports-hinduism-in-india-thirumavalavan.html