திங்கள், 12 டிசம்பர், 2016

வாகனம் செல்வதற்கான ஒலிரும் ஸ்டிக்கர் விளக்குகள் இல்லை

அன்னவாசல் அருகே பாலம் கட்டும் பணி மாற்றுப்பாதையில் வாகனம் செல்வதற்கான ஒலிரும் ஸ்டிக்கர் விளக்குகள் இல்லை வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு. 
அன்னவாசல், டிச.11-
புதுக்கோட்டை -விராலிமலை சாலையில் அன்னவாசல் அருகே புதிய மூன்று பாலங்கள் கட்டுவதற்கான வேலைகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கின இதில் முதலாவதாக அன்னவாசல் பல்லூரணி அருகே ஒரு பாலம் கட்டும் பணி நடைபெற்றுக்கொண்டுள்ளது. இந்த பாலம் கட்டும் பணிக்காக மாற்று பாதைக்காக வயலின் வாய்க்கால் புதிதாக செல்லும் வாகனங்கள் பகுதியை ஒட்டிஅமைக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பகல் நேரங்களில் சென்று திரும்பி விடுகின்றன. இந்த சாலை எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் சாலை என்பதால் இரவு நேரங்களில் கூடுதலான வாகனங்கள் சென்று வருகின்றன.இதனை அடுத்து நேற்று இரவு கரூரில் இருந்து புதுக்கோட்டைக்கு சிமெண்ட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது லாரியை புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டியன் என்பவர் ஓட்டினார் லாரி புதிதாக கட்டப்படும் பாலம் அருகே வந்த போது இரவில் மாற்றுப்பாதை என்பதற்கு எந்த அடையாளமும் இல்லாததால் லாரியை தெரியாமல் பாலம் வேலை செய்யும் பகுதியில் மோதி நிறுத்திவிட்டார். அந்த இடத்தில் பெரிய கல் ஒன்று இருந்ததால் அதிஷ்டவாசமாக லாரி பாதி கவிழ்ந்த நிலையில் நின்றது மேலும் லாரி கவிழ்ந்திருந்தால் புதுக்கோட்டை - விராலிமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கும் என்றும் உடனடியாக இரவில் அந்த இடத்தில் மின் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் மிளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும் எற்றும் வாகன ஓட்டிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.








Related Posts: