வியாழன், 1 டிசம்பர், 2016

வங்கக்கடலில் உருவான நடா புயலின் தோற்றமும், நகர்வும்

Nadal

வங்கக் கடலில் உருவான நடா புயலின் தோற்றம் குறித்தும், அதன் நகர்வு குறித்தும் பார்க்கலாம்.
தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த 29 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு நிலை உருப்பெற்றது. அடுத்த நாளில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து சென்னையில் இருந்து சுமார் 700 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டிருந்தது. மணிக்கு சுமார் 20 கி.மீ வேகத்தில் நகர்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தெற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று பிற்பகலில் புயலாக மாறியது. 
இன்று காலை சென்னையில் இருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் நடா புயல் மையம் கொண்டிருந்தது. நடா புயல் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி நாளை அதிகாலை கடலூர் அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை விட்டுவிட்டு மழை பெய்யும் என்றும் அவ்வப்போது பலத்த தரைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.