வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள வர்தா புயல் தற்போது தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள வர்தா புயல், மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து தற்போது நெல்லூரில் இருந்து 880 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தீவிரமடைந்துள்ள வர்தா புயல், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் மாலை நெல்லூர்- மச்சிலிப்பட்டினம் இடையே வர்தா புயல் கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக நாளை மாலை முதல் தென் கடலோர ஆந்திர பகுதிகளில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக வட தமிழகம், ஆந்திராவை ஒட்டிய கடலோர பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
பதிவு செய்த நாள் : December 10, 2016 - 02:28 PM