திங்கள், 12 டிசம்பர், 2016

இந்தியாவை தாக்கும் பாகிஸ்தான் சிவப்பு ரோஜா…!!

இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர், வங்கதேசம், மாலத்தீவு மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் தான் பெயரை தீர்மானம் செய்கின்றன.
கடைசியாக சென்னையை தாக்கிய நடா புயலுக்கு கூட ஓமன் நாடுதான் பெயர் வைத்தது.
தற்பேது தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ள புதிய புயலுக்கு வர்தா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வர்தா புயல் தென் ஆந்திரா மற்றும் வட தமிழக பகுதிகளில் தற்போது கரையை கடந்து வருகிறது.
இந்த புயலுக்கு வர்தா என்ற பெயரினை வைத்தது பாகிஸ்தான். வர்தா என்றால் சிகப்பு ரோஜா என்று அர்த்தம்.
பாகிஸ்தான் பெயர் வைத்ததலோ என்னவோ சென்னையில் இந்த புயல் சுற்றி சுற்றி அடிக்கிறது. மணிக்கு 300 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதால் இதுவரை 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
இந்த புயல் காரணமாக சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மழை கொட்டொ கொட்டு என்று கொட்டும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் சம்பந்தபட்டு இருந்தாலே அது இந்தியாவுக்கு பெரும் ஆபத்துதான் போல் இருக்கிறது

Related Posts: