★★★★★★★★★★★★★★★★★★★★★★★
மோடி தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்த துடித்து கொண்டிருக்கும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய இயக்கம் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பாக மாபெரும் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் இயக்க தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில் எஸ்.டிபி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய போது, மோடி அரசு நாட்டில் பல்வேறு விதமான மக்கள் விரோத கொள்கைகளை நாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்துள்ளது, அதை மக்களாகிய தாங்கள் போராடினால் மட்டுமே விடியலை நோக்கிய (மதவெறியர்கள்) இல்லாத இந்தியாவை உருவாக்கிட முடியும் எனவும், பொது சிவில் சட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டுவருவதாக நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதை முற்றிலுமாக அவதானிப்பது ஆர்.எஸ்.எஸ். என்ற ஒரு மதவெறிப்பிடித்த இயக்கம் தான் எனவே நாம் எதிர்க்க வேண்டியது ஆர்.எஸ்.எஸ். என்ற மதவெறியர்களையும் தான். மேலும், இஸ்லாமிய வரலாற்றில் ஃபிரவுன், காரூன், நம்ரூத், போன்ற பல கொடுங்கோல் ஆட்சியாளர்களை கண்டு வெற்றி பெற்ற சமுதாயம் முஸ்லீம் சமுதாயம் எனவே மோடி மஸ்தானையெல்லாம் பார்த்து இக்கூட்டம் ஒரு போதும் அஞ்சிடாது என தனது உரையில் குறிப்பிட்டார்கள்.