வியாழன், 26 ஜனவரி, 2017

போலீஸ் தடியடியால் உங்களுக்கு பாதிப்பா..?” – “உடனே புகார் செய்யுங்கள்” – உதவி எண்கள் அறிவிப்பு


போலீஸ் தடியால் பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக தமிழக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்யலாம் என நீதிபதி அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த 15ம் தேதி முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் கட்சிகள் உள்பட ஏராளமான பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் திரண்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, பொதுமக்களும் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம், அரசு தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
அதன்பின்னர், முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார். டெல்லியில் 2 நாள் முகாமிட்டு, ஜல்லிக்கட்டு நடத்த தற்காலிக அவசர சட்டம் கொண்டு வந்தார். ஆனால், அதை மாணவர்கள் ஏற்கவில்லை. நிரந்தர சட்டம் வேண்டும் என போராட்டத்தை தொடர்ந்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலை முதல் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, வலுக்கட்டாயமாக அப்புறப்ப்படுத்தினர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். ஆனாலும் போராட்டத்தை கைவிட மறுத்த கல்லூரி மாணவர்கள், கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
இதனால், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. சாலையில் நடந்த செல்வோரையும் போலீசார் கடுமையாக தாக்கினர். வாகனங்களை தீ வைத்து எரித்தனர். இந்த காட்சிகள் அனைத்து செல்போனில் படம் பிடித்த பொதுமக்கள், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம வைரலாக பரவ செய்தனர்.
இந்நிலையில், சென்னையில் நடந்த கலவரத்தின்போது, போலீசாரின் வன்முறை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக புகார் செய்யலாம் என தமிழக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்யலாம் என நீதிபதி மஞ்சுளா அறிவித்துள்ளார்.
மேலும், போலீசார் தாக்கியதற்கான ஆதாரங்கள், புகைப்படங்கள், வீடியோ காட்சிகளையும் தயங்காமல் அனுப்பலாம்  என தனது அலுவலக தொலைபேசி, மின்னஞ்சல், தொலைநகல் ஆகியவை மூலம் என கூறியுள்ளார்.
இதுதொடார்பாக புகார் தெரிவிக்க வேண்டியவை கீழ் வருமாறு.
தொலைபேசி எண் :  044-24951492, 044-2495 1484
Fax : 91-44-2495 1486
E-mail : shrc@tn.nic.in

http://kaalaimalar.net/jallikattu-protest-all-over-tamilnadu-kx/