1.அந்நிய நாட்டு குளிர்பானங்கள் மற்றும் பொருட்களை முடிந்த வரையில் தவிருங்கள்.
2.உங்களால் முடிந்த வரை நடை பாதை வியாபாரிகளிடம் காய்கறி மற்றும் பழங்களை வாங்குங்கள்.
3.ஏழை விவசாயிகளுக்கு உங்கள் நண்பர்களோடு சேர்ந்து எவ்வகையில் உதவு முடியும் என்று பாருங்கள்.
4.நாட்டு மாடு,கோழி,ஆடு போன்றவைகளை வாங்கிக் கொடுத்து அவர்கள் வாழ்வதற்கு உதவுங்கள்.
5.பாக்கெட்டில் வரும் பாலை நிராகரித்து,நம் பால்காரர்களிடம் வாங்குங்கள்.
6.ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு சிறு தொழில் கற்க கை கொடுங்கள்!!
7.நண்பர்களை சேர்த்துக் கொண்டு உங்கள் ஊரில் உள்ள கருவேல மரங்களை வேரோடு அகற்றி விட்டு,நம் பாரம்பரிய வேம்பு,புங்கை,ஆலமரங்களை நட்டு வைத்து பராமரியுங்கள்.
இப்படி இதெல்லாமே நாம் சமூகத்திற்கு கொடுக்கும் நல்ல விஷயங்கள் தான்!!நல்ல விஷயங்களை விதைப்போம்,நல்லனவே அறுவடையாகும்!!
போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா??
இப்படியும் இருக்கலாம் போராட்டம் 🙂
நம்மிடம் இருந்து ஆரம்பிக்கட்டும் இந்த சிறு மாற்றம்!! நாம் சந்தையை உருவாக்கி விவசாயிகளிடம் தருவோம்,அவர்கள் ஆரோக்கியம் எனும் ஆகச்சிறந்த விஷயத்தை நமக்கு தருவார்கள்