செவ்வாய், 10 ஜனவரி, 2017

தெற்காசியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு..எச்சரிக்கை மணி அடிக்கும் ஆய்வாளர்கள்

இந்தியப் பெருங்கடலின் அடிப்பகுதியில் புதிதாக ஏற்பட்டுள்ள பாறை அடுக்கால் தெற்காசிய பகுதிகளில் அதிகளவு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் இந்தோனேசிய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வினை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அந்தமான் மற்றும் இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதிகளில் கடந்த 2012ம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்திய பெருங்கடலின் ஆழத்தில் பாறை நகர்வு ஏற்பட்டது. இந்த பாறை நகர்வால் இந்தியப் பெருங்கடல் பகுதியின் ஆழத்தில் புதிய பாறை அடுக்கு உருவாகியுள்ளது. இதனால் ஏற்கனவே உள்ள பாறை அடுக்குடன், புதிய பாறை அடுக்கும் மோதுவதால் எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: