புதன், 22 ஜூலை, 2020

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தை மத்திய அரசு தீவிரமாக கருதவில்லை - ராகுல் காந்தி

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தை மத்திய அரசு தீவிரமாக கருதவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கொரோனா காலத்தில் மத்திய அரசின் சாதனைகள் என்ற தலைப்பில், தனது டுவிட்டர் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, கடந்த பிப்ரவரியில் ஹலோ டிரம்ப் நிகழ்ச்சி  நடத்தப்பட்டதையும், மார்ச் மாதம், மத்தியப் பிரதேச  காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் மெழுகுவர்த்தி  ஏற்றச் சொன்னது, மே மாதத்தில் மோடி அரசின் 6ம்  ஆண்டு தொடக்கத்தை கொண்டாடியது, ஜூன் மாதத்தில் பீகாரில் பேரணி நடத்தியது, ஜூலையில் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க முயற்சிப்பது ஆகியவைதான் அரசின் சாதனைகள் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் அரசின் முன்னுரிமை பட்டியலில் இல்லாததால், மக்கள் அதனை புரிந்து கொண்டு தாங்களே போராடிக் கொண்டிருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.