மானிய விலை கியாஸ் சிலிண்டர்,மண்எண்ணெய் விலை அதிகரிப்பு…நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை சிலிண்டர் ஒன்றுக்கு 2 ரூபாயும், மண்எண்ணெய் லிட்டருக்கு 26 காசுகளும் உயர்த்தி அரசு எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இது நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.
சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சாஎண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப அரசு எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்கள் விலையை மாதத்தில் முதல்தேதியிலும், 15-ந்தேதியிலும் மாற்றி அமைதத்து வருகின்றன. அதன்படி, டிசம்பர் 31-ந்தேதி இரவு எரிவாயு சிலிண்டர், மண்எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டது.
14.2 கிலோ எடை கொண்ட மானிய விலையில் அளிக்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது, இனி டெல்லியல் இதன் விலை ரூ. 432.71 காசுகளில் இருந்து ரூ.434.71 காசுகளாக விற்பனை செய்யப்படும். தொடர்ந்து 7-வது மாதமாக மானிய விலை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மானியம் இல்லாத சந்தைவிலையில் விற்பனை செய்யப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இனி ரூ. 585 ஆக உயர்த்தப்படுகிறது. ஏழைமக்கள், நடுத்தரமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு வரும், மண்எண்ணெய் விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இனி மண்ணெய் லிட்டர் ரூ.19.43 காசுகளாக விற்பனை செய்யப்படும்.