நவம்பர் 9-ந் தேதிக்கு பிறகு, பான் எண் கொடுக்காமல் 2 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்பட்ட தொகை முடக்கி வைக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கருப்புப் பணம் பதுக்கலை ஒழிக்கவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும் மத்திய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பான் எனப்படும் வருமான வரிக் கணக்கு எண்ணை இணைக்காத 5 லட்ச ரூபாய்க்கு மேல் இருப்புள்ள வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதே போல் நவம்பர் 9-ந் தேதிக்குப் பிறகு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தப்பட்டுள்ள பான் எண் குறிப்பிடாத கணக்குகளும் முடக்கப்படும். இத்தகைய கணக்குகள் பான் எண்ணை இணைக்கும் வரையோ அல்லது பான் எண் பெறவில்லை என்பதற்கான படிவம் அறுபதை அளிக்கும் வரையோ முடக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.