ஞாயிறு, 15 ஜனவரி, 2017

வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்ததா PAYTM நிறுவனம்?

தொழில்நுட்ப ரீதியாக வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடியில் செய்யும் PAYTM நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. 

பணமில்லா வணிகத்தை ஊக்கவிக்கும் வகையில் செல்போன் மூலமாக பணபரிவர்த்தனையை மத்திய அரசு நேரடியாக ஊக்கவித்து வருகிறது. இதனை பயன்படுத்தி பல்வேறு நிறுவனத்தினர், MONEY WALLET என்ற பெயரில் புதிய ஆப்பை அறிமுகம் செய்து வருகின்றனர். 

இத்துறையில் பிரபலமான நிறுவனமான PAYTM நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக தற்போது அந்நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ அமைப்பினர், நிறுவனத்தின் உயரதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். 

48-க்கும் மேற்பட்ட புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிபிஐ அமைப்பினர், இதுவரை 6.25 லட்சம் ரூபாய் வரை மோசடி நடைபெற்றுள்ளதாக கூறியுள்ளனர். 

குற்றம் நிருபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைக்கு PAYTM நிறுவனத்தினர் உள்ளாவர்கள் என்றும் கூறப்படுகிறது. PAYTM நிறுவனம் சீனாவை தலைமையிடமாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.