சனி, 28 ஜனவரி, 2017

கிழித்து தொங்கவிடப்படும் பன்னீரின் முகத்திறை...!

கிழித்து தொங்கவிடப்படும் பன்னீரின் முகத்திறை...!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படம் பயன்படுத்தப்பட்டது: RSS ஊழியர் பன்னீர் செல்வம் அறிக்கை.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியால் கதிகளங்கியுள்ளது மத்தியில் ஆளும் பாசிச சக்திகள் மட்டுமல்ல. மாநிலத்தில் நடக்கும் பினாமி ஆட்சியின் முதல்வரும் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இளைஞர்களின் சக்தியும், சமூக வலைதலங்களின் வலிமையும் ஆளும் அரசுகளை கலங்க வைத்துள்ளன.
கண்டிப்பாக வரலாறு போற்றும் "அறவழிப் போராட்டத்தில் வெற்றிகண்ட எம் இளைஞர்களை" அதேபோல் கண்டிப்பாக வரலாறு தூற்றும் "காவல்துறையில் வன்முறை வெறியாட்டத்தை..."
இளைஞர்களின் எழுச்சியையும், இந்து-முஸ்லிம் ஒற்றுமையையும் சகித்துக்கொள்ள இயலாத கயவர்கள் புத்தி பேதலித்து நாளும் ஒரு அறிக்கையை விட்டுக்கொண்டிருக்க
இன்றைய சட்டசபையில் காவல்துறையின் வன்முறையை பற்றி எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிக்க திராணியற்ற பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படம் பயன்படுத்தப்பட்டது என்றும், சமூகவிரோதிகள் நுழைந்ததாலும் காவல்துறை குறைந்தபட்ச நடவடிக்கையே எடுத்துள்ளனர் என அறிக்கை வெளியிட்டுள்ளார் பன்னீர்.
புத்தி பேதலித்த எச். ராஜா பின்லேடனே போராட்டத்தில் கலந்து கொண்டார் என கூட சொல்வான். அதையும் சட்டசபை அறிக்கையாக வெளியிடுவாரா பன்னீர்???
பதவியை காப்பாற்ற பாஜகவின் அடிமையாக செயலாற்றி கொண்டிருக்கும் பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா???
பின்லேடன் படம் பயன்படுத்தப்பட்ட இடம், அவன் யார், அவனுக்கும் பின்லேடனுக்கும் என்ன தொடர்பு என்பதைப்பற்றி கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
வெறும் புகைப்படத்தை மட்டும் வைத்து ஆதாரம் என்றால் அரசுக்கு எதற்கு உளவுத்துறை???
பொதுமக்களால் பகிரப்பட்ட குடிசைக்கும், ஆட்டோக்களுக்கும் போலிஸ் தீவைப்பு வீடியோ பன்னீருக்கு கிடைக்கவில்லையாம்.... ஆனால் உற்ற நண்பன் எச்.ராஜாவால் பகிரப்பட்ட பின்லேடன் படம் மட்டும் கிடைத்ததாம்...
போலிஸ் தீவைத்தது சித்தரிக்கப்பட்டதாம்...
பின்லேடன் புகைப்படம் உண்மையாம்....
பாஜகவும், Rss ம் போட்டோஸாப் பில் கில்லாடிகள் என்பது நாடறிந்த விசயம்...
இதையெல்லாம் ஆதாரமாக கொடுப்பது கேவலத்திலும் கேவலம்...
தமிழகத்தில் கடந்த டிசம்பர் 5 முதல் நடப்பது அதிமுக அரசு அல்ல பினாமி பாஜகவின் அரசு என்பதை சதந்தேகமின்றி தெளிவடைய செய்திருக்கிறார் பன்னீர்...
இனி அதிமுகவுக்கு அழிவுகாலமே....
source: Tnm media

Related Posts: