நார்வே ஆய்வாளர்கள்
சமீபத்தில் நார்வே ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், தினமும் 1 அல்லது 1/2 கப் பாலைக் குடிப்பவர்களை விட, 3 கப் பாலைக் குடிப்பவர்களுக்கு, 3 மடங்கு அதிகமாக மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. புள்ளிவிவரம் சமீபத்திய புள்ளி விவரத்தின் படி, உலகில் மார்பக புற்றுநோயால் பின்லாந்து, ஸ்வீடன், பிரிட்டன், கனடா மற்றும் அமெரிக்கா போன்ற பகுதிகளில் வாழ்பவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
காரணம்
உலகிலேயே இந்த நாடுகளில் மார்பக புற்றுநோய் அதிகம் வருவதற்கு காரணம், அங்கு பால் உற்பத்தியும், அதைப் பருகுவோரின் எண்ணிக்கையும் அதிகம் இருப்பது தான் காரணம்.
பால் எப்படி புற்றுநோயை உண்டாக்கும்?
பாலில் உள்ள ஹார்மோன்களும், குறிப்பிட்ட உட்பொருட்களும் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. மேலும் இத்தகைய பாலில் சுத்திகரிக்கப்பட்ட வைட்டமின் டி சத்துக்கள் சேர்க்கப்படுகிறது. மருத்துவ நிபுணர்களும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களது உடலை சோதித்ததில், சிந்தடிக் வைட்டமின் டி இருமடங்கு அதிகம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
மார்பக புற்றுநோய்க்கான இதர காரணிகள்
ஒருவருக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு மோசமான டயட், காய்கறிகள், மீன் போன்றவற்றை குறைவாக சாப்பிடுவது, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகம் சாப்பிடுவது போன்றவையும் காரணங்களாகும்.
பிரா
பெண்கள் அணியும் பிராவும் மார்பக புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக மிகவும் இறுக்கமாக பிரா அணிந்தால், மார்பக புற்றுநோய் மிகவும் வேகமாக தாக்கும். அதுவும் தொடர்ந்து 12 மணிநேரம் இறுக்கமான பிரா அணிந்தால், மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகரிக்கும். எனவே பெண்களே! கவனமாக இருங்கள்.