ஒடிசாவில் ஆம்புலன்ஸ் தர அரசு மருத்துவமனை மறுத்ததால், உயிரிழந்த தனது மகளை தந்தை ஒருவர் சாலையில் தூக்கிச் சென்ற அவலம் நடந்துள்ளது.
ஒடிசாவின் அன்குல் நகரை சேர்ந்த கதி திபார் என்பவரது 7 வயது மகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பல்லஹராவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, தனது மகளின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு, தந்தை திபார் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார். இதற்கு சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
இதையடுத்து, மகளின் சடலத்தை தோளில் சுமந்தவாறே 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனது வீட்டிற்கு மனைவியுடன் திபார் சென்றார். இந்த காட்சி ஒடிசா ஊடகங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.