திங்கள், 23 ஜனவரி, 2017

பெண்கள்,குழந்தைகளுக்கு படகு மூலம் உணவளித்து வரும் மனிதாபிமான மீனவர்கள்..


பெண்கள்,குழந்தைகளுக்கு படகு மூலம் உணவளித்து வரும் மனிதாபிமான மீனவர்கள்..
மெரினா  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு படகு மூலம் மீனவர்கள் உணவு, தண்ணீர்  வழங்கி வருகின்றனர்.
கடந்த 7 நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் போராடி வரும் போராட்டக்கார்க்ள இன்று காலை அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்.
அவர்களில் பலர்  அங்கிருந்து வெளியேறி விட்ட நிலையில் ஒருசிலர் கடல் பகுதிக்கு சென்று நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அதே நேரத்தில் போலீசார் அவர்களை சுற்றி வளைத்துள்ளனர்.அதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் சிக்கியுள்ளனர்.
ஏற்கனவே நேற்று இரவு சாப்பிட்ட பின் இதுவரை அவர்கள் எதுவும் சாப்பிவில்லை என்பதால்  தொடர்ந்து நிற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், பசியாலும் அதில் சிலர் மயக்கமடைந்துள்ளனர்.
உணவு, தண்ணீர் கொண்டு செல்லும் அனைத்து வழிகளும் போலீசாரால் முடக்கப்பட்டுள்ளதால் கடல் வழியாக  மீனவர்கள், படகுகள் மூலம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சாப்பாடும், தண்ணீரும் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் வெயில் தொடர்ந்து அதிகமாகி வருவதால் பெண்கள், குழந்தைகள் நிற்க முடியாமல் திணறி வருகின்றனர். அவர்களில் பலரும் தங்கள் கைகளில் அப்துல் கலாம் போட்டோக்களை வைத்துக் கொண்டும் தேசிய கீதம் பாடிக்கொண்டும் அவ்விடத்தை விட்டு அசையாமல் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ரோந்து படகுகள் மூலம் மீனவர்கள் உணவளித்து வருவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
source: kaalamalar

Related Posts: