வெள்ளி, 27 ஜனவரி, 2017

PETA மற்றும் சில தரங்கெட்ட மீடியாவால் மறைக்கப்பட்ட இன்னொரு வன்மம்..

சிப்பிப்பாறை என்கிற வார்த்தை நீங்க கேட்டது இல்லை என்றால் சிரமம் பார்க்காமல் இதை முழுவதும் படியுங்கள் தமிழர்களே. இது போன வருடமோ இல்லை அதற்கு முன்போ நடந்தது இல்லை. போன மாதம் DEC 16 2016.

நம் தமிழ் இன காளைகளை போல் இன்னும் ஒரு இனம் தமிழகத்தில் தனித்துவம் பெற்றது உண்டு. அது நம் மண்ணின் நாய்கள் இனம். அதை PETA முற்றிலுமாக அழித்துவிட்டது என்றே சொல்லலாம்.

நம்மை போன்ற படித்த மக்களுக்கு தெரிந்தது எல்லாம் PUG, LABRADOR, GERMAN SHEPHERD போன்ற அந்நிய நாட்டு நாய்கள் தான். இத படிக்கும் எத்தனை பேருக்கு தெரியும் நம் மண்ணின் நாய்கள் சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை மற்றும் ராஜபாளையம். நம் இன நாய்களுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு.

சிப்பிப்பாறை - நம் முன்னோர்கள் வேட்டை ஆட பயன்படுத்துவார்கள் வீட்டிற்கு சிறந்த காவலன். Hare என்கிற முயலை விட வேகமாக ஓட கூடியது. மனிதர்களுடன் நேசம் பழகுவது இதற்கு மிகவும் பிடிக்கும்.

கன்னி - இது உரிமையாளருக்கு மிகவும் உண்மையாக இருக்கும். சுயமாக சிந்திக்க கூடிய திறன் படைத்தது. ஆகையால் பழகுவது மிகவும் எளிது. முன்பு பெண் வீட்டார் பெண்ணுக்கு சீதனமாக கன்னியை பரிசளிப்பார்கள்.

கோம்பை - பண்ணை காவலன். தனி ஒருவனாக காவல் காப்பார் இவர். இவரை மீறி எந்த மிருகமும் கிட்ட நெருங்க முடியாது. காட்டுஎருமையை வேட்டையாடும் திறன் படைத்தவர்.

ராஜபாளையம் - உரிமையாளருக்கு மிகவும் விசுவாசமானது. உரிமையாளர் தவிர வேற யாரும் தொட விடாது. 75cm உயரம் வரை வளர கூடியது.

இந்த நான்கு இனங்களும் அழிந்து போகும் தருவாயில் இருக்கிறது. இந்த இனங்களை மீட்டு எடுத்து பாதுகாக்கவும், அழிவை தடுக்கவும் தமிழ்நாடு அரசு "நாய் வளர்ப்பு பிரிவு" சைதாப்பேட்டை யில் இயங்கி வந்தது. இவர்கள் நம் இன நாய்களை இனவிருத்தி செய்து அழியாமல் பாதுகாத்து வந்தனர். யார் வேண்டுமானாலும் இங்கு சென்று நம் இன நாய்களை வாங்கி வளர்க்கலாம்