ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்த அவசரச்சட்டத்தை எதிர்த்து விலங்குகள் நல வாரியத்தின் அனுமதியில்லாமல் அதன் உறுப்பினர் அஞ்சலி சர்மா மனுத்தாக்கல் செய்து வகையாக சிக்கிக்கொண்டார்.
கேரள மாநிலத்தில் நாய்களை கொல்வதற்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்போகிறேன் என்று கூறி விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி பெற்றுவிட்டு இப்போது ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து விலங்குகள் நல வாரியத்தின் அனுமதியின்றி எந்த மனுவும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யக்கூடாது என அதன் செயலாளர் ரவிக்குமார் உத்தரவி்ட்டுள்ளார். மேலும், அஞ்சலி சர்மா தாக்கல் செய்த மனுவையும் உடனடியாக திரும்பப் பெறவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், மத்தியஅரசு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம், ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு எதிராக வெளியிட்ட அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக மத்தியஅரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோகத்கி இன்று உச்சநீதிமன்றத்தில்மனு செய்தார்.
ஆதலால், ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான அனைத்து தடைகளும் உடைந்து வருகின்றன என்றே எடுக்கலாம். ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் இளைஞர்கள் ஒரு வாரம் அறப்போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, மத்தியஅரசின் உதவியோடு, தமிழக அரசு ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்டத்தை கொண்டு வந்து அதை நிறைவேற்றியது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மத்தியஅரசு ஏதுவாக கொண்டு வந்த அவசரச்சட்டத்தை ரத்து செய்யும் விதமாக கியூப்பா , பியாபோ என்ற அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தன.
இந்த வழக்கில் தங்களின் முடிவை கேட்காமல் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசு தரப்பிலும், தனிநபர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அமைப்புகள் தரப்பிலும் என மொத்தம் 69 கேவியட் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் அதன் உறுப்பினர் அஞ்சலி சர்மா தாக்கல் செய்த மனு வாரியத்தின் அனுமதி பெறாமல் தாக்கல் செய்தது எனத் தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக வாபஸ் பெறக்கோரி விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இது தொடர்பாக விசாரணை செய்ததில் அஞ்சலி சர்மா, கேரளாவில் தெருநாய்கள் கொல்லப்படுவதற்கு எதிராக விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்போகிறேன் என்று அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு போட்டிக்காக எதிராக மனு தாக்கல் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, இந்திய விலங்குகள் நலவாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், இந்திய விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் தெருநாய்கள் கொல்லப்படுதற்கு எதிராக மனுத்தால் செய்யப்போகிறேன் கூறிவி்ட்டு,
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எந்த விதமான மனுக்கல் தாக்கல் செய்படுவது சட்டவிதிகளுக்கு முரணானது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனு உடனடியாக வாபஸ் பெறப்படும் என அறிக்கை வெளியிட்டார்.
இதற்கிடையே அஞ்சலி சர்மா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர் அஞ்சலி சர்மா கூறுகையில், தான் தாக்கல் செய்தது அவசரச்சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனு அல்ல, கடந்த 2016ம் ஆண்டு தாக்கல் செய்த மனுமீதான இடைக்கால மனுதான். இதை நான் விலங்குகள் நலவாரியத்தின் அனுமதியில்லாமல் தாக்கல் செய்யவில்லை, அனுமதியோடுதான் தாக்கல் செய்தேன்.
இதில் வாரியத்தின் செயலாளர் கடிதம் சட்டப்பூர்வமாக என்னை தடுக்காது. என்ன நடந்ததோ அதை உச்சநீதிமன்றத்தில் நான் தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்தார்.
இதனால், விலங்குகள் நல வாரியத்துக்கு உள்ளேயே இப்போது மோதல் ஏற்படத் தொடங்கிவிட்டது. மேலும்,ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தவிடக்கூடாது என்ற அடிப்படையில் அஞ்சலி சர்மா தாக்கல் செய்த மனு இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.