
தினசரி உணவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக உட்கொண்டால்தான், ஆரோக்கியம் நம்மிடத்தில் நிலைக்கும். போதிய நேரமும், ஆலோசனையும் இல்லாததால், வயிற்றை நிரப்ப ஏதேனும் சாப்பிட வேண்டும் என்றாகி விட்டது. ஆகவே, சத்துள்ள உணவுகளை உட்கொள்ள பழகுங்கள். நாம் உண்ணும் உணவில், பருப்பு வகைகளை சேர்த்து கொண்டாலே ஆரோக்கியம் நிலைக்கும்.
பருப்பு வகைகளில், பச்சை பயறு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு பவுல் வேக வைத்த பச்சை பயறில், 100 கலோரிகளுக்கு மேல் உள்ளது. இவை நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக மட்டுமில்லாமல், சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கும் பயன்படுகிறது. பச்சை பயறை தினசரி சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்:
உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு, பச்சை பயறு ஏற்ற மருந்தாக பயன்படுகிறது. பச்சை பயறு நீண்ட நேரம், வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பவுல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒருநாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து கொள்ளும் போது, இரும்புசத்தும் கூடும்.
பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் சுற்றுவோர், பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை உணவில் சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம்.