இந்தியத் தலைநகர் புதுதில்லி அருகில் அம்மணமாக்கப்பட்ட அப்பாவிகள்!
தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம் காவல்துறை பணம் பறித்ததைக் கண்டித்து போராடிய இரு குடும்பத்தின் ஆண்,பெண்களை காவல்துறை பட்டப்பகலில் அம்மணமாக்கி அராசகம் செய்துள்ளது!
காவல்துறையின் கொள்ளையைக் கண்டித்துப் போராடியவர்கள் குற்றவாளிகளா?
போராடியவர்களை அம்மணமாக்கிய காவலர்கள் குற்றவாளிகளா?
அதை வேடிக்கை பார்க்கும் இந்த சொரணையற்ற மக்கள் குற்றவாளிகளா?
இது போன்ற குற்றங்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் அரசும்,அரசியல்வாதிகளும் குற்றவாளிகளா?
இந்தக் கொடுமைகளின் மறுபெயர் தான் சாதி இந்துத்துவ இந்தியாவா?
ஒருபக்கம் ஒடுக்கப்பட்ட மக்களை இந்துக்களாக கொம்பு சீவி இசுலாமியர்களுக்கு எதிராகத் திருப்புவதும்!
மறுபக்கம் அவர்களை மனீதர்களாகக் கூட ஏற்காமல் இப்படிக் கொடுமைப்படுத்துவதற்கும் பெயர் தான் இந்துத்துவமா?
மாட்டைக் காப்பாற்றவும் ,மனுதர்மத்தை நிலைநாட்டவும் மனிதர்களை பலிகொடுத்துப் போராடும் ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் மனிதர்களை நிர்வாணமயமாக்குவதைக் கூடத் தடுக்கமுடியாதா?
