வெள்ளி, 2 அக்டோபர், 2020

கே.எஸ்.அழகிரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்.

அப்போது, போலீசார் தள்ளிவிட்டதில் ராகுல்காந்தி கீழே விழுந்ததாக குற்றம்சாட்டி, சென்னை சத்தியமூர்த்திபவன் எதிரே கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது சட்டவிரோதமாக கூடுதல், தொற்று நோயை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.