வெள்ளி, 2 அக்டோபர், 2020

வழக்கில் குற்றம் சாட்டப்படாத நபரின் போனை போலீஸ் கைப்பற்ற முடியுமா?

 Mohamed Thaver

Can the police seize your phone even if you are not an accused in the case? : ரியா சக்ரவர்த்திக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு வரும் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ரியா மற்றும் மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மேலாளர் ஜெயா சாஹா ஆகியோரின் செல்போன்களை கைப்பற்றி தரவுகளை திரட்டி வருகின்றனர். அவர்கள் இருவரின் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகைகள் தீபிகா, ஷ்ரத்தா மற்றும் சாரா அலிகானின் போன்களையும் என்.சி.பி. கைப்பற்றியுள்ளது.

விசாரணையில் இருப்பவர்களின் போனை காவல்துறை பரிமுதல் செய்ய இயலுமா?

முடியும். கிரிமினல் ப்ரோசிஜர் கோட் பிரிவு 102 -ன் கீழ் காவல்துறையினருக்கு, விசாரணைக்கு தேவையான முக்கியமாக கருதப்படும் பொருட்களை கைப்பற்றும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கான அதிகாரங்கள் பிரிவின் கீழ் முக்கியான பொருட்களை கைப்பற்றும் உரிமை குறித்து “எந்த ஒரு காவலரும், ஒரு பொருள் திருடப்பட்டது என்று நினைத்தாலோ, ஏதேனும் ஒரு குற்றத்திற்கான சூழலை உருவாக்கும் விதமாக அமைந்தாலோ அதனை கைப்பற்றலாம். அந்த காவலர், அந்த பொருளை எங்கே கைப்பற்றினார் என்று உடனே நீதிபதிக்கு அறிவிப்பார். என்.சி.பி. என்பது ஒரு மத்திய ஆய்வு பிரிவு. அவர்கள் காவல்துறையினர் அல்ல. ஆனால் என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் தேடி கைப்பற்றுவதற்கான உரிமையை பெறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

அந்த நபர் குற்றம் சாட்டப்பட்டவராக பெயரிடப்படவில்லை என்றால் என்ன நடக்கும்?

சிஆர்பிசியின் 102வது பிரிவு மொபைல் / மடிக்கணினி / டைரி அல்லது வழக்கை விசாரிக்க உதவும் என்று அவர்கள் நினைக்கும் எதையும் கைப்பற்ற அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்குகிறது. காவல்துறையினர் விசாரணைக்கு உதவும் என்று நினைப்பவர்களை, அந்த நபர் ஒரு குற்றவாளியாக இருந்தாலும் அல்லது ஒரு சாட்சியாக இருந்தாலும் பிரச்சனையில்லை, விசாரிக்கலாம்.

தொலைபேசி கைப்பற்றப்பட்ட நபரின் தனியுரிமைகள் மதிக்க ஏதேனும் பாதுகாப்புகள் உள்ளதா?

விசாரணைக்கு செல்லும் அதிகாரி தனிப்பட்ட கருவிகளை விசாரணைக்காக மட்டுமே எடுத்துக் கொள்கிறார். மேலும் அதில் இருக்கும் தகவல்கள் வேறு யாருக்கும் கசிய கூடாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதையும் மீறி தனித்தகவல்கள் கசிய துவங்கினால் அந்த நபர்கள் நீதிமன்றங்களை அணுகி, தொடர்ந்து தகவல் கசிவு ஏற்படுத்துவதை தவிர்க்கலாம். இல்லையென்றால் அது மானநஷ்ட வழக்கிற்கு வழி வகுக்கும். தனிநபரின் தரவுகள் அனைத்தும் விசாரணையின் ஒரு பகுதி என்று நம்புகின்றனர் என்று ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

தீபிகா, சாரா மற்றும் ஷ்ரதா ஆகியோரைப் பொறுத்தவரை, அவர்கள் தாமாக முன்வந்து தங்கள் தொலைபேசிகளை வழங்கியதாக ஏஜென்ஸி தெரிவித்துள்ளது. அது குறித்து?

ஐபிஎஸ் அதிகாரி இது குறித்து கூறும் போது, பொதுவாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொலைபேசிகளைக் கைப்பற்றும்போது, குறிப்பாக ஒரு குறிப்பிட்ட வழக்கில் சாட்சிகளிடமிருந்தோ அல்லது நிலப் பதிவுகள் போன்ற அரசாங்க நிறுவனங்களிடமிருந்தோ தரவைப் பெறும்போது, “ஒப்படைத்தல் / கையகப்படுத்துதல்” என்பது விசாரணையின் தன்மையை எளிமையாக்க தான்.  ஒரு குறிப்பிட்ட ஆவணம் / சாதனத்தைக் கைப்பற்றுவதற்கு, சாட்சிகளின் முன்னிலையில் சாட்சியங்களைப் பறிமுதல் செய்தல், ஒரு பஞ்சனாமா செய்தல், பொருட்களை சீல் செய்தல் மற்றும் மின்னணு பொருட்களின் விஷயத்தில் ஹாஷ் மதிப்பை எடுத்துக்கொள்வது உள்ளிட்ட முறையான செயல்முறையை உள்ளடக்கியது. ஒப்படைத்தல் / கையகப்படுத்துதல் பொதுவாக இந்த விரிவான நடைமுறைகள் இல்லாமல் செய்யப்படுகிறது, மேலும் இது செயல்முறையை விரைவுப்படுத்துகிறது.

எந்த சந்தர்ப்பங்களில் ஏஜென்சிகள் பொருள்களை கைப்பற்றுதல் / ஒப்படைத்தல் / எடுத்துக்கொள்வது செயல்களை செய்கிறது?

சாட்சியங்கள் உருவாக்கப்பட்டது என்று நீதிமன்றத்தில் கூறக்கூடிய சாத்தியக்கூறுகளை கொண்ட வழக்குகளில் இவ்வாறு பொருட்கள் கைப்பற்றப்படுகிறது. இதன் மூலம், பின்னாளில் எழும் தேவையற்ற புகார்களில் இருந்து தப்பித்துக் கொள்ள, சாட்சியாளரின் முன்பே பொருள்கள் கைப்பற்றப்படுகிறது. சாட்சிகள் பின்னர் இதனையே நீதிமன்றங்களில் உறுதிப்படுத்த வேண்டும்.  அரசு அமைப்பின் நில பதிவுகள் / பிறப்புச் சான்றிதழ்களை ஒரு நிறுவனத்திடம் ஒப்படைப்பது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு வாய்ப்பில்லாத சந்தர்ப்பங்களில் ஒப்படைத்தல் / கையகப்படுத்துதல் வழக்கமாக நிகழும். மாநில காவல்துறை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பொருள்களை கைப்பற்றுகிறது. அதே நேரத்தில் சிபிஐ போன்ற மத்திய ஏஜென்சிகள் சில சமயங்களில் ஒப்படைப்பதை / கையகப்படுத்துவதைப் பயன்படுத்துகின்றன.

மின்னணு பொருட்களில் ஹாஷ் மதிப்பு என்றால் என்ன?

ஏஜென்சிகள் மொபைல், லேப்டாப், மற்றும் இதர மின்னணு டிவைஸ்களை கைப்பற்றும் போது ஹாஷ் மதிப்பை பதிவு செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சாதனத்தில் இருக்கும் உள்ளடக்கங்களை குறிக்கும் எண்ணிக்கையால் ஆன அல்கிரிதமே அடிப்படையில் ஹாஷ் என்று வழங்கப்படுகிறது. அந்த சாதனத்தில் இருக்கும் உள்ளடக்கத்தை யாராவது மாற்ற நினைத்தால் ஹாஷ் மதிப்பு மாறும். தடவியல் அதிகாரிகளிடம், தரவுகளை மீட்க, வழங்கப்படும் போது டிவைஸ் பெறப்பட்ட நேரத்தில் இருக்கும் ஹாஷ் மதிப்பும், திரும்ப தரும் போது ஹாஷ் மதிப்பும் ஒன்றாக இருந்தால் மட்டுமே மேற்படி செல்வார்கள். இது தரவின் தன்மையை உறுதி செய்கிறது. சோதனையின் போது ஹாஷ் மதிப்புகள் பெறப்படுவதில்லை. சைபர் நிபுணர்கள் முன்னிலையில் ஒரு பையில் செல்போன் சீல் வைத்து எடுக்கப்படும். அதே போன்று கம்யூட்டர்களையும் ஸ்விட்ச் ஆஃப் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. தரவுகள் அழிய வாய்ப்புகள் இருப்பதால் அப்படியே வயரை மட்டும் இழுத்து சீல் வைக்கின்றனர்.

வேறெந்த வழக்கு விசாரணையின் போது ஹாஷ் மதிப்பு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை?

பீமா கோராகான் வழக்கில் சில சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், புனேவில் 2017ம் ஆண்டு ஷனிவார் வாடாவில் நடைபெற்ற எல்கர் பரிஷாத்தில் வன்முறையை தூண்டியதாக கூறி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு பொருட்களின் ஹாஷ் மதிப்பை அதிகாரிகள் வழங்கவில்லை என்று அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினார்கள். சில சந்தர்ப்பங்களில் ஹாஷ் மதிப்பு மாதங்களுக்குப் பிறகு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்தன, இதன் மூலம் சாதனங்களில் உள்ள தரவுகளின் தன்மை குறித்து கேள்விக்குள்ளாக்கியது, என்று கைது செய்யப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த பொருட்கள் எப்போது திருப்பி தரப்படுகிறது?

அந்த பொருட்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் தன்மை குறித்தே கூற முடியும். குற்றப்பத்திரிகையில் கூறப்பட்ட எந்த ஆதாரமும் அதில் கிடைக்கவில்லை என்றால் சாதனத்தின் உரிமையாளர் அல்லது விசாரணை அதிகாரி சாதனத்தை திருப்பித் தருமாறு நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம். அல்லது முக்கியமான ஆதாரங்கள் அதில் இருக்கும் பட்சத்தில் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும். அல்லது ஆதாரங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றம் அந்த சாதனங்களை தர ஒப்புக் கொள்ளும்.